என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தலைமையின் முடிவை விரும்பாவிட்டாலும் அதை ஏற்றுக்கொள்வது கடமை- மாணிக்கம் தாகூர்
- கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு.
- ஒற்றுமையை நமது மிகப்பெரிய சக்தி.
சென்னை:
தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்டது கிடைத்தால் தொடருவோம் என்ற நிலைப்பாட்டில் காங்கிரசும், போனால் போகட்டும் பார்க்கலாம் என்ற மனநிலையில் தி.மு.க.வும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியலை தி.மு.க. அறிவிக்க உள்ளது.
தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியானால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு. ஆனால் எந்த தனிநபரையும் விட கட்சியே உயர்ந்தது. தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை- ஏனெனில் ஒற்றுமையை நமது மிகப்பெரிய சக்தி என பதிவிட்டுள்ளார்.






