என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
- தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Live Updates
- 27 Oct 2024 5:46 PM IST
த.வெ.க. கொள்கைகள்: மதம், சாதி, இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது. மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்.
- 27 Oct 2024 5:42 PM IST
எல்லா கேள்விகளுக்கும் பதில் தேடும் போது அரசியல் என்ற பதில் கிடைத்தது - த.வெ.க. தலைவர் விஜய்
- 27 Oct 2024 5:41 PM IST
நம்மை பார்த்து யாரும் விசில் அடித்தான் குஞ்சு என்று கூறிவிட கூடாது. அவர்கள் வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்றே கூற வேண்டும்- த.வெ.க. தலைவர் விஜய்
- 27 Oct 2024 5:09 PM IST
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்குகிறது.
- 27 Oct 2024 4:42 PM IST
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
- 27 Oct 2024 4:37 PM IST
தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
- 27 Oct 2024 4:22 PM IST
தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் Ramp-ல் நடந்து சென்றபோது தடுப்புக் கட்டை மீது ஏறி வந்து சல்யூட் அடித்த பாதுகாவலருக்கு விஜய் வணக்கம் வைத்தார்.
















