கரூர் கூட்டநெரிசல்: Stampede என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன?

கூட்ட நெரிசல் சம்பவங்களை ஆங்கிலத்தில் Stampede என்று குறிப்பிடுகிறார்கள். ஹத்ராஸ் கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.
கரூர் கூட்டநெரிசல்: Stampede என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன?
Published on

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் (2025) கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கூட்ட நெரிசல் சம்பவங்களை ஆங்கிலத்தில் Stampede என்று குறிப்பிடுகிறார்கள். கடந்தாண்டு உ.பி. மாநிலம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.

Stampede என்ற ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? பெருமளவிலான மக்கள் ஒரே இடத்தை நோக்கி ஓடுவதை தான் ஆங்கிலத்தில் Stampede என்று குறிப்பிடுகிறார்கள்.

2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் Stampede என்ற வார்த்தை 7-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com