என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் கபடி வீராங்கனை கார்த்திகா
- அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிலையில், கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கார்த்திகா, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "AsianYouthGames-ல் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.






