வரியை செலுத்தாவிடில் ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்- வருமான வரித்துறை

வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது.ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார்.
வரியை செலுத்தாவிடில் ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்- வருமான வரித்துறை
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.

ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com