என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு- ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
    X

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு- ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    தமிழகத்தில் 1991-96 வரை ஜெயலலிதாமுதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜெயலலிதா வசித்த வீட்டில் சோதனை நடத்தியதில், தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த நகைகள், பொருட்கள் அனைத்தும் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நாகரத்னா, சதீஷ் சந்திரா அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    முன்னதாக, பிப். 14, 15ல் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×