என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. பூ மாலை அல்ல - கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்: ஜெயக்குமார்
    X

    அ.தி.மு.க. பூ மாலை அல்ல - கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்: ஜெயக்குமார்

    • இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
    • அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் தலைவர் என்றும் அவரது புகழ் ஒருபோதும் குறையவே குறையாது.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார்.

    எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது அவர்களுடைய கருத்தாகும். எங்கள் கருத்தை பொறுத்தவரை பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் சொல்வார் என்றார்.

    குரங்கு கையில் இருக்கும் பூமாலை போல அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்த கருத்து பற்றி ஜெயக்குமார் கூறும்போது, அவர் சொல்வார்

    இது (அ.தி.மு.க.) பூமாலை கிடையாது, இது கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கற்கள் பற்றி பேச முடியாது. செங்கற்கள் என்பது வேறு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்பது வேறு. இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.

    100 நாள் வேலை திட்டத்திற்கு பெயர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

    மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி விட்டோம், எங்கள் பொது செயலாளர் சொல்லி விட்டார். அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது. ஏழை மக்களுக்கு அது சிரமம் அதை மத்திய அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து, முன்பு இருந்தது போல ஆக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்களுக்காகவே அந்த திட்டம் இருக்கிறது. அதை முழுமையாக சிதைக்காமல் உள்ளதை உள்ளபடி இருக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×