என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாஜக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை அறிவிப்பு!
    X

    "பாஜக புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை" - அண்ணாமலை அறிவிப்பு!

    • இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
    • தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார்.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

    இதற்கிடையே தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கண்டிஷன் போட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

    இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.

    இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.

    புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்வேன், டெல்லி செல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் பணி என்றைக்குமே தொடரும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×