என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனமழை காரணமாக கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும்
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- சென்னை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






