என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மீண்டும் இந்தி
- இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.
- சில மணி நேரங்களில் பெயர் பலகையை ரெயில்வே அதிகாரிகள் திருத்தி எழுதினர்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.
தி.மு.க சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை மட்டும் தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மையை அதன் மீது பூசி அதனை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரெயில் நிலையம் முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் பொள்ளாச்சி ரெயில் நிலைய பெயர் பலகையில் மீண்டும் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டது. சில மணி நேரங்களில் பெயர் பலகையை ரெயில்வே அதிகாரிகள் திருத்தி எழுதினர்.
கருப்பு மையால் இந்தியை அழித்த 4 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






