என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விழுப்புரத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - அவசர உதவி எண்கள் அறிவிப்பு
    X

    விழுப்புரத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - அவசர உதவி எண்கள் அறிவிப்பு

    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
    • கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.

    கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நேற்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இதற்கிடையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×