தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோவிலில் கட்டுங்கடங்காத பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம், கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. பக்தர்கள் வந்த வாகனங்களால் ஊருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோவிலில் கட்டுங்கடங்காத பக்தர்கள் கூட்டம்
Published on

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகும் விளங்கி வருகிறது.

இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது மண்டல பூஜைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேலும் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 7மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் வெயிலில் கைக்குழந்தையுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர் விடுமுறை நாள் என்பதால் கோவில் வளாகம், கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. பக்தர்கள் வந்த வாகனங்களால் ஊருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com