என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: மீண்டும் மீண்டுமா..! புதிய உச்சத்தில் தங்கம் விலை
    X

    GOLD PRICE TODAY: மீண்டும் மீண்டுமா..! புதிய உச்சத்தில் தங்கம் விலை

    • தினமும் காலை மற்றும் பிற்பகல் என தங்கம் விலையில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
    • தங்கம் விலை அதிகரித்து, சவரன் ரூ.93,000-ஐ நெருங்குகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்தது. இதுமேலும் அதிகரித்து, சவரன் ரூ.93,000-ஐ நெருங்குகிறது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், மாலை மேலும், ரூ.440 உயர்ந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,640க்கு விற்பனையாகிறது.

    ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×