என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY : ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 உயர்வு : இல்லத்தரசிகள் அதிர்ச்சி
- தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்கப்பட்டது.
- ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விறபனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து, தற்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14.270-க்கும் சவரனுக்கு 1,920ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையாது. மொத்தத்தில் இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து விற்பனையாகிறது. காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
30-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
29-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-02-2026- ஒரு கிராம் ரூ.300
01-02-2026- ஒரு கிராம் ரூ.320
31-01-2026- ஒரு கிராம் ரூ.320
30-01-2026- ஒரு கிராம் ரூ.405
29-01-2026- ஒரு கிராம் ரூ.425






