என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேம்பாலத்துக்கு பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் நன்றி
- உயர்மட்ட பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
- கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
கோவை அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார். தொடர்ந்து மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதற்காக கோவை வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அப்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு சூட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Next Story






