பஹல்காம் தாக்குதலில் சிக்கிய தம்பதி முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

பஹல்காமில் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரனை முதலமைச்சர் நலம் விசாரித்தார்.
பஹல்காம் தாக்குதலில் சிக்கிய தம்பதி முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
Published on

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் மற்றும் அவர் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்முவின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்கள் குண்டடிப்பட்டு புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது 'அவரது மருத்துவ மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி அளித்து சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் முதலமைச்சர் அவர்கள், புதுடெல்லி சென்றிருந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் நடைபெற்ற சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று இல்லம் திரும்பிய டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களும் அவர் குடும்பத்தாருமான அவரது துணைவியார் டாக்டர் மநயன்தாரா, தந்தையார் திரு பி. ஆறுமுகம். மாமனார் டாக்டர் டி.கே.மணிகுமார், மாமியார் டாக்டர் ஜெ.சித்ரா, மாமன் டாக்டர் வேதாந்த சீனிவாசன் ஆகியோர் மாபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இன்று (08-08-2025) காலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இற்றிகழ்வின் போது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், வி.செந்தில்பாலாஜி, அமைச்சர் தங்கம் தென்னரக, கழக விவசாய அணிச் செய்வாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்,விஜயன், செய்தி தொடர்பு தலைவர் டி கே.எஸ்.இளங்கோவன் ஆகிடியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com