என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்- இபிஎஸ்
    X

    தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம்- இபிஎஸ்

    • அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி.
    • அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி, நம் இந்தியத் திருநாட்டின் கொள்கைத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த உத்தமர்கள் அனைவரையும் நினைவுகூர்வதுடன், தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×