என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல - மு.க.ஸ்டாலின்
- ஒரு கோடி குடும்பங்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
- கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல"-னு தமிழ்நாடே சொல்லும்!
நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் '#ஓரணியில்_தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த இக்குடும்பங்கள் கூடி உறுதிமொழி ஏற்பது என்றும், 20-ஆம் நாளன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாபெரும் கூட்டங்கள் நடத்தி உறுதிமொழி ஏற்பது என்றும் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கழகத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் முப்பெரும் விழா-வுக்கு உங்கள் எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
செப் 17 அன்று கரூரில் திரள்வோம்! கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.






