என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குடும்பத்தினரை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் அடிமையாகி விட்டார்: டி.கே.எஸ். இளங்கோவன்
    X

    குடும்பத்தினரை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் அடிமையாகி விட்டார்: டி.கே.எஸ். இளங்கோவன்

    • தற்போது அதிமுக, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினரை பாதுகாக்க விரும்புகிறார்.
    • அவர்கள் பாஜக-வின் அடிமையாகிவிட்டார்கள்.

    சென்னை துறைமுகம், எழும்பூர் தொகுதிகளின் பாக முகவர்கள் மற்றும் இளைஞர் அணியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது உதயநிதி "எப்படியாவது காவிக்கு இங்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. கருப்பு, சிவப்பு வேஷ்டி அணிந்திருக்கிற தி.மு.க.வினர் இருக்கின்ற வரைக்கும் தமிழ்நாட்டிற்குள் காவியை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டிற்குள் நுழைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படியாவது பறித்துவிட முடியாதா? என்று தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தொகுதி மறுவரையறை என்று சொல்லி தமிழ்நாட்டில் இருக்கிற 39 எம்.பி. தொகுதிகளை 31 தொகுதியாக குறைப்பதற்கான முயற்சியிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு இருக்கிறது.

    தேர்தல் வந்தவுடன் தி.மு.க., தமிழ்நாட்டு மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார். நாங்கள் ஒன்றும் உங்களை மாதிரி அமித் ஷா வீட்டுக் கதவையோ, கமலாலயம் கதவையோ திருட்டுத்தனமாக சென்று தட்டவில்லை.

    எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்து இருக்கிற திட்டங்களின் உரிமையுடன் சென்று ஒவ்வொரு வாக்காளரையும், தைரியமாக சென்று சந்தித்து கொண்டு இருக்கிறோம். உங்களால் சந்திக்க முடியுமா? எனவே நிச்சயம் நம்முடைய கூட்டணிதான் வெற்றி பெறும்" எனப் பேசினார்.

    எப்படியாவது காவிக்கு இங்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முயற்சி செய்து கொண்டு இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது தொடர்பாக திமுக செய்தி தொர்பாக டி.கே.எஸ். இளங்கோவனிடம கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்து கூறியதாவது:-

    அதிமுக மூலமாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய விரும்புகிறது. அவர்கள் கூட்டி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது. தற்போது அதிமுக, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினரை பாதுகாக்க விரும்புகிறார். அவர்கள் பாஜக-வின் அடிமையாகிவிட்டார்கள். தமிழக மக்கள் அதிமு-பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் கருப்பு சிகப்பு தமிழகத்தில் உள்ளது. காவிக்கு இடமில்லை.

    1999-ல் நாங்கள் பாஜக-வில் இணைந்தபோது, அது ஒரு நிலையற்ற அரசாங்கமாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குள், 3 தேர்தல்கள் நடந்தன. இனிமேல் பாஜகவுடன் எந்த தொடர்பும் இருக்காது என்று ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறியிருந்தும், எடப்பாடி பாஜக-வின் காலில் விழுந்துவிட்டார். ஏனென்றால் பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது, மேலும் ED போன்ற நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

    இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×