என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவிப்பு - இ.பி.எஸ்.
- 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
- இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். காரணம் அது அ.தி.மு.க.வின் திட்டம்.
* 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
* கிட்னி முறைகேடு விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கவில்லை.
* என் மீதான புகாரில் நிரபராதி என நிரூபித்து விட்டு தான் நிற்கிறோம்.
* தேர்தலை நோக்கியே தி.மு.க. அரசு தற்போது பயணப்பட்டு கொண்டிருக்கிறது.
* தி.மு.க.விற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்துள்ளது.
* இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






