என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வினர் புலி வாலை பிடித்துவிட்டனர்- த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .
- தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு.
திருப்பூரில் குப்பை பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக அமல்படுத்த ப்படாமல் செயல்பாடு இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பையால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்பு அளவு அதிகரித்துள்ளது. இது கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரம் மூலம் தி.மு.க.வினர் புலி வாலை பிடித்து விட்டனர். ஏற்றுமதி நிறைந்த நகரம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக உள்ளது. திருப்பூர் மாவ ட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பது மக்கள் மீது அவர்கள் எந்த அளவு க்கு அக்கறை வைத்திரு க்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .
உரிய முறையில் ஆய்வு செய்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அவர்களை இணைக்க தமிழக வெற்றி கழகம் முயற்சி செய்யும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் 2 கட்சிகளும் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். பிரச்சினை இல்லாத இடத்தில் பிரச்சி னையை உருவாக்கியது இவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.






