என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க வெற்று அறிக்கையை கொடுத்து ஆட்சிக்கு வந்தது- சீமான் கடும் தாக்கு
    X

    தி.மு.க வெற்று அறிக்கையை கொடுத்து ஆட்சிக்கு வந்தது- சீமான் கடும் தாக்கு

    • ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை.
    • மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக இன்று 2-வது நாளாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காளை சிலை, மரப்பாலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:-

    தமிழ் தேசிய மக்கள் பல நெடுகாலமாக வாழ்விடத்தை இழந்த நிலையில் தாங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கி றார்கள். தமிழக மக்கள் பாதுகாக்க எந்த நடவடி க்கையும் இல்லை. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன், அணு உலை, மின்சாரம் போன்ற அனைத்தும் பிரித்து கொடுக்கப்படுகிறது.

    ஆனால் காவிரி நதிநீர் உரிமையில் ஒரு சொட்டு நீர் பெற முடியவில்லை. இத ற்காக போராடும் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதை தடுக்க ஆள் இல்லை. எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு மருத்துவத்தை கனவாக கொண்டு உள்ள தம்பி, தங்கை கனவுகள் நனவாகமால் போனதற்கு நீட் கொண்டு வந்தது காங்கிரஸ்.

    அதற்கு தி.மு.க கூடவே இருந்தது. நீட் ரகசிய திட்டம் உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு தி.மு.க வந்தார்கள். இப்படி எல்லாம் வெற்று அறிக்கையை கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. நீண்ட காலமாக தமிழக மக்கள் மத்தியில் வாக்கு பெற்று அதிகாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    மாநில தன்னாட்சி, தமிழ் இன மக்கள் பெற்று அதிகாரத்தில் வந்தவர்கள் எந்த உரிமையும் மக்களுக்கு கொடுக்க வில்லை. கல்வி மாநில உரிமையை மத்திய அரசு எடுத்து கொள்ளும் போது மாநில அரசு அமைதியாக இருந்து விட்டது.

    இத்தனை ஆண்டுகள் பிறகு கல்வியை மாநில பட்டியல் கொண்டு வருவோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். வந்த பிறகு வாயை மூடி விட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்க்கும் போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை.

    இந்த இடத்தில் மாநில உரிமைகளை இவர்கள் பாதுகாக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வீதி வீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க. வந்து கேட்கவில்லை. ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை. தண்ணீர் சேகரிக்க ஏரி குட்டை எதையும் இவர்கள் செய்ய வில்லை.

    இவர்கள் சாதித்ததாக எதை சொல்வார்கள். ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள். எதுவுமில்லை அதையும் மதுக்கடைகள் மூலம் திரும்ப ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்கிறார்கள். பேரிடர் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம்.

    ஒவ்வொரு தேர்தல் போதும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் வாக்குறுதியில் மட்டுமே உள்ளது. இன்று வரை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. மீனவர்கள் வலை கிழிப்பு, தாக்குதல் படகுகள் பறிமுதல் போன்றவை நடக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் மீனவர்கள் எல்லை தாண்டும் இதுபோன்ற செயல் இல்லை.

    உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிற்கிறது. ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்பினால் கண்டிப்பாக மாற்றம் நிச்சயமாக உருவாகும்.இந்த அரசியல் தேவையா தேவை இல்லையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் வாக்கு கேட்டு வரவில்லை வருங்கால வாழ்க்கை கேட்டு வருகிறோம்.

    உங்கள் குரலாக உணர்ந்து வாக்களியுங்கள். அதிகாரம் வலிமையானது. அதனை எளிமையான கோட்பாடு கொண்ட எங்களுக்கு வழங்குகள். தேர்தல் ஆணையம் பல இடங்களில் 100 சதவீதம் வாக்கு செலுத்துவது கடமை என விழிப்புணர்வு வைக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்கு காசு வாங்கினால், கொடுத்தால் தண்டனை என்று அதில் இடம் பெறவில்லை.

    நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையம் நாடகம் கம்பெனி இருந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து யாராவது ஒருவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் தேர்தலில் காசு கொடுக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி நிறுவனங்களிடம் அதிகமாக நிதி வசூல் செய்கிறது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்து விட்டு மக்கள் வரிப்பணத்தில் மிக்சி, கிரைண்டர் வாங்கி நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார்கள்.

    இவர்கள் தொடர்ந்து தேர்தல் அரசியல் தான் செய்வார்கள். இதனால் காதில் தேன் ஊற்றுவது போல செய்வார்கள். 50ஆண்டுகள் மயக்கத்தில் உள்ள மக்கள் தற்போது விழித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள். இடைத்தேர்தல் என்று கருதாமல் மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×