என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் குடிபோதையில் இடையூறு செய்த தொண்டனால் எரிச்சல் அடைந்த திண்டுக்கல் சீனிவாசன்
    X

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் குடிபோதையில் இடையூறு செய்த தொண்டனால் எரிச்சல் அடைந்த திண்டுக்கல் சீனிவாசன்

    • ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைமுகமாக ரூ.8500 கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட தயாராகி உள்ளனர் என்று பேசினார்.

    இடையகோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் புலியூர் நத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.3.25 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கொடுத்து விட்டு பல்வேறு வரிகள் மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

    இதனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைமுகமாக ரூ.8500 கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்கள் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்தது. ஆனால் தற்போது அந்த திட்டங்களை நிறுத்தி விட்டனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஏமாற்றி விட்டனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட தயாராகி உள்ளனர் என்று பேசினார்.

    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்த போதே குடிபோதையில் இருந்த ஒரு தொண்டர் 100 நாள் வேலைக்கு சம்பளம் தரமாட்டிங்கிறாங்க, ஒயின்ஷாப்பில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் அதையும் பேசுங்கள் என சத்தம் போட்டார். இதனால் டென்ஷனான திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. தொண்டரை பார்த்து அமைதியாக இருப்பா... எல்லாத்தையும் பற்றி பேசுகிறேன் என கூறி விட்டு அவரை அங்கிருந்து அகற்றுமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×