என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பயிர் நிவாரணம்- ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு
- பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
- இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
2024-2025ல் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.289.63 கோடி நிதி ஒதிக்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.289.63 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Next Story






