என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு
    X

    தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு

    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்
    • சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்குவழங்கப்படும் இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று என்று செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

    இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×