என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
- 1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
- 1984-ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Live Updates
- 14 Dec 2024 11:08 AM IST
பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் "சிறு வயதில் இருந்தே தனக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தெரியும். இயல்பாக பேசக்கூடியவர். தனது கட்சிக்காரர்கள் என்று கூட பார்க்காமல் விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் இரங்கல்" எனத் தெரிவித்தார்.
- 14 Dec 2024 11:02 AM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story












