என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனியார் பொழுதுப்போக்கு பூங்காவில் விபத்து- கல்லூரி மாணவி படுகாயம்
- சீட் பெல்ட் அணிவதற்குள் ராக் அண்டு ரோல் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து.
- ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்துள்ளார்.
சீட் பெல்ட் அணிவதற்குள் ராக் அண்டு ரோல் ராட்டினத்தை இயக்கியதால் கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜப்ரீன் பாத்திமா கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராட்டினத்தை அஜாக்கிரதையாக இயக்கியதாக தனியார் பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






