என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வருகிற 19-ந் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
    X

    வருகிற 19-ந் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

    • கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

    இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 19-ந்தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×