என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
- தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி' கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதலமைச்சர் நிர்ணயித்துக் கொடுத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று கூறியுள்ளார்.
Next Story






