என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
- சட்டம்-ஒழுங்கை காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உத்தரவுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது, ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உத்தரவுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.
Next Story






