என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலி- விமான கட்டணம் மும்முடங்கு உயர்வு
    X

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலி- விமான கட்டணம் மும்முடங்கு உயர்வு

    • தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
    • வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் மூலம் அதிக அளவிலான பயணிகள் தற்போது பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிலும் குறிப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வரும் புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு முடிவு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் அதிக அளவிலான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவார்கள்.

    இதன் எதிரொலியாக தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,765 நிர்ணயிக் கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறையை முன்னிட்டு ரூ.9,046 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோன்று பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.3,573 இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.8,655 ஆகவும், ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.5,321 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.15,529 ஆகவும்,

    மும்பையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் கட்டணமாக ரூ.6,119 ஆக இருந்து வரும் நிலையில் தற்போது ரூ.13,306 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்ல விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×