ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் இரவு 7.30 மணி வரை தற்காலிகமாக மூடல்

புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் இரவு 7.30 மணி வரை தற்காலிகமாக மூடல்
Published on

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கக்கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் இரவு 7.30 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com