என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேப்பேரியில் சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழப்பு
    X

    வேப்பேரியில் சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழப்பு

    • அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள நெடுஞ்சாலை இன்று காலை பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

    அப்போது சென்ட்ரல் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். கமிஷனர் அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தை தாண்டி பெண் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மின்னல் வேகத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். அதற்குள் சரக்கு வாகனம் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் விபத்தில் பலியான பெண் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ஸ்ரீதேவி. 42 வயதான இவர் புதுப்பேட்டை ஷேஷாத்திரி தெருவை சேர்ந்தவர் ஆவார். புரசைவாக்கம் பகுதிக்கு சென்று விட்டு புதுப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது தான் இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.

    அதன் பிறகே விபத்தை ஏற்படுத்தியது சரக்கு வாகனம் என்பது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது தொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்திய போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×