என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நிகிதா பெயரில் என்னுடைய புகைப்படத்தை பரப்புகிறார்கள் - பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்
    X

    நிகிதா பெயரில் என்னுடைய புகைப்படத்தை பரப்புகிறார்கள் - பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்

    • அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா.
    • முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் இணைத்து பேசுகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தனது காரில் இருந்த நகைகள் மாயம் என நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற தனிப்படை போலீசார், கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார்.

    இந்நிலையில் நிகிதா பெயரில் தனது புகைப்படம் பரப்பப்படுவதாக திருவள்ளூர் கிழக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    என் பெயர் ராஜினி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளேன்.

    அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா. என் மண் என் மக்கள் யாத்திரைக்காக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் புகைப்படத்துடன் இணைத்து பேசுகிறார்கள்.

    சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இதை கொண்டுபோனது செந்தில் சரவணன் என்பவர். பேஸ்புக், டுவிட்டரில் அவர் ID தான் வெளிவருகிறது. சில செய்திகளையும் வெளியிட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அது என்னுடைய புகைப்படம். அண்ணாமலை என் அண்ணா. அவரை முன்னிறுத்தி தான் நாங்கள் உள்ளேயே வந்தோம். ஆனா அந்த போட்டோவை வைத்து இந்த மாதிரி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு லேடீசை கலங்கப்படுத்தியதுபோல் இல்லை. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேற லெவலில் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×