என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் - மீண்டும் வலியுறுத்திய வேல்முருகன்
- நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், " தமிழ் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நீயா நானா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் அதே வேலையில் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை சீரழிக்கும் "பிக் பாஸ்" போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அதன் லாப நோக்கம் நிச்சயம் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும், விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்படவில்லையென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் தளமும், விஜய் டிவி அலுவலகமும் கட்சியின் மகளிர் அணியினரால் முற்றுகையிடப்படும்" என்று தெரிவித்தார்.






