என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் சந்திரகிரகணத்தை காண 10 இடங்களில் ஏற்பாடு
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.
- டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
சூரியனுக்கும் சந்திரனுக் கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இதனால் சந்திரன் மறைக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங் கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ள னர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.
பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.
இந்நிலையில், இன்று இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம். கோவூர், நாவலூர் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






