என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்- தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படுமா?
    X

    அண்ணாமலை 'திடீர்' டெல்லி பயணம்- தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படுமா?

    • தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களில் அண்ணாமலையும் ஒருவர்.
    • கட்சித் தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

    அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படாதது கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்திருந்த மத்திய மந்திரி அமித்ஷா நிருபர்களிடம் கூறும் போது, அண்ணாமலையின் பணிகள் பாராட்டுக்குரியது. அவருக்கு கட்சி மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கும் என்றார்.

    நேற்று தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களில் அண்ணாமலையும் ஒருவர்.

    இந்த நிலையில் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். பதவி மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை திடீரென்று டெல்லி சென்று இருப்பது கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

    டெல்லியில் அவர் கட்சித் தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    புதிய தேசிய தலைவர் தேர்தல் நாளை மறுநாள் டெல்லியில் நடக்கிறது. அப்போது அண்ணாமலைக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×