என் மலர்
தமிழ்நாடு

நடிகர் டெல்லி கணேஷ், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் மறைவு- அண்ணாமலை இரங்கல்

- டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் இருக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த டெல்லி கணேஷ் மற்றும் இந்திரா சவுந்தரராஜன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.திரு. டெல்லி கணேஷ்… pic.twitter.com/GBBRqtA3vD
— K.Annamalai (@annamalai_k) November 10, 2024
தொடர்ந்து, இரந்திரா சவுந்தரராஜன் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பக்தியையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தனது படைப்புகளை உண்மைக்கு மிக நெருக்கமாக உருவாக்கி, லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்த பெருமைக்குரியவர். மிகச் சிறந்த பக்திமானாகத் திகழ்ந்தவர்.
திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடிகளைச் சேர, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டிருந்தார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பக்தியையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தனது படைப்புகளை உண்மைக்கு மிக நெருக்கமாக உருவாக்கி, லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்த பெருமைக்குரியவர். மிகச்… pic.twitter.com/2yIAREBLBq
— K.Annamalai (@annamalai_k) November 10, 2024