என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி ராமதாஸ் அதிகாரம் இல்லாதவர்: என்னை நீக்க முடியாது- அருள் எம்.எல்.ஏ.
- என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது.
- ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் இரா.அருள் எம்.எல்.ஏ. நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இரா. அருள் எம்.எல்.ஏ. "அன்புமணி ராமதாஸ் அதிகாரம் இல்லாதவர். அவர் செயல் தலைவர் மட்டும்தான். என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது. ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது. ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசி ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கட்சி காப்பாற்றப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி கட்சியில் உள்ளவர்களை நீக்குவதும், சேர்ப்பதுமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் டாக்டர் ராமதாஸ், இரா.அருள் எம்.எல்.ஏ.-வை பாமக-வின் இணை பொதுச் செயலாளராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இரா. அருள் எம்.எல்.ஏ. வகித்த மாவட்ட செயலாளர், தலைவர் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.






