என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழகம் முழுவதும் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story






