என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபைக்கு இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
- சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
- சட்டையில் ‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து நேற்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தே சட்டசபை கூட்டத்துக்கு வந்திருந்தனர். மேலும் சட்டையில் 'யார் அந்த சார்?' என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.
Next Story






