என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டசபைக்கு கருப்பு சட்டையில் வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சட்டசபைக்கு கருப்பு சட்டையில் வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்

    • முதல் நாள் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 'யார் அந்த சார்' என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதல் நாள் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 'யார் அந்த சார்' என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். சட்டசபை கூட்டத்தில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்ட பின்னர், சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். நேற்றும் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    2 நாட்களாக யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க.வினர் இன்று கருப்புச்சட்டையில் யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து வந்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

    கருப்பு சட்டை அணிந்து ஒரு சில அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூடுதலாக மாஸ்க் அணிந்து வந்தனர். டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம் என்ற வாசகத்துடன் மாஸ்க் அணிந்து இருந்தனர்.

    Next Story
    ×