என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சரவையில் உள்ள 8 பேர் எட்டப்பனாக மாறி திமுக-வுக்கு சென்றவர்கள்: எடப்பாடி பழனிசாமி
- திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியதை கிடைக்காது.
- அதிமுக-வால் அடையாளம் காட்டி, அங்கு சென்றவர்களுக்குதான் மரியாதை கிடைக்கிறது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பேரணியின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக என்பது ஜனநாயகம் உள்ள ஒரு கட்சி. திமுக-வை பொறுத்தவரையில் அது ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று ஸ்டாலின் பேசுகிறார். திமுக-வில் உழைப்பவர்களுக்கு மரியதை கிடைக்காது. அதிமுக-வால் அடையாளம் காட்டி, அங்கு சென்றவர்களுக்குதான் மரியாதை கிடைக்கிறது.
இங்கிருந்து செந்தில் பாலாஜி போனார். அவருக்கு நல்ல இலாகா. இங்கிருந்து ரகுபதி போனார். அவருக்கு நல்ல இலாகா. இப்படி தமிழக அமைச்சரவையை பார்த்தீர்கள் என்றால் 8 பேர் அதிமுக-வில் இருந்து போனவர்கள். திமுக-வில் ஆளில்லை. 8 பேர் எட்டப்பனாக மாறி திமுகவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்று ரகுபதி நச்சு வார்த்தையை கக்கி கொண்டிருக்கிறார். அதிமுக என்ற ஒரு கட்சி இருந்ததனாலேயே நாட்டு மக்கள் ரகுதிபதி என்பவரை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். துரோகிகளை பற்றி கவலைப்பட தேவையில்லை. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






