என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

50-வது திருமணநாள்.. வாழ்த்திய தோழமை இயக்கத் தலைவர்களுக்கு முதலமைச்சர் நன்றி
- உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
- எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமணநாளை கொண்டாடுகிறார். இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன் என அறிக்கையில் கூறினார்.
Next Story






