என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 பேர் பலி
- பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியது.
- வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ரெயில் மோதியதில் 50 மீட்டர் இழுத்து செல்லப்பட்டதில் பள்ளி வேன் சுக்குநூறாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story






