என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெள்ளியங்கிரி மலை ஏறிய 2 பக்தர்கள் உயிரிழப்பு
    X

    வெள்ளியங்கிரி மலை ஏறிய 2 பக்தர்கள் உயிரிழப்பு

    • வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது
    • நடப்பாண்டில் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.

    இந்நிலையில், கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    உடல் நிலை மோசமான நிலையில் 5ஆவது மலையில் சிக்கியிருந்த நபர் உயிரிழந்தார். ஏற்கெனவே ஏழாவது மலையேறிய போது காரைக்காலைச் சேர்ந்த கௌசல்யா மயங்கி விழுந்து உயிரிழந்தார்

    நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×