என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 1,796 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்
- கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியாவில் கடந்த ஆண்டில் (2024) 13,476 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில், தமிழ்நாட்டில் மட்டும் 1,796 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன்படி பார்க்கையில், இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. அதற்கு முந்தைய இடத்தில் டெல்லி இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சூழலில், கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் எவ்வளவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன? என்பது குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியல் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.






