search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
    X

    புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

    • கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.
    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்ததால் 2 ஏரிகளில் இருந்தும் 100 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,730 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. நேற்று 84 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 141 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

    ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 21 அடியில் 18.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2,668 மி.கன அடி தண்ணீர் உள்ளன. நேற்று 33 கன அடி ஆக இருந்த நீர்வரத்து தற்போது 219 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.26 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஏரியில் இருந்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வரும் நாட்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×