search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    VIBRANCE 2024 விழா - திரை பிரபலங்கள் வருகையால் VIBE-க்கு தயாராகும் VIT
    X

    VIBRANCE 2024 விழா - திரை பிரபலங்கள் வருகையால் VIBE-க்கு தயாராகும் VIT

    • தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
    • விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், ஜோனிதா காந்தி, ஆண்ட்ரியா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    வி.ஐ.டி சென்னையில் வைப்ரன்ஸ் - VIBRANCE 2024 சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், பின்னணி பாடகி ஆண்ட்ரியா, பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    விஐடி சென்னையில் நடைபெறும் சர்வதேச அளவிலான கலை திருவிழாவான வைப்ரஸின் லோகோவினை விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் வெளியிட்டார். கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், மாணவர் நல இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் விசுவநாதன், "தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மார்ச் 6,7,8,9-ம் தேதிகளில் விஐடி சென்னையில் நடைபெறுகிறது.

    இதில், ஐ.ஐ.டி. என்.ஐ டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், ஜப்பான், பிரேசில், இலங்கை, மியான்மர், எத்தியோப்பியா, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

    200 வகையிலான கலை போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் என மொத்தம் 250 போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தப் பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    முக்கிய நிகழ்வாக வைப்ரன்ஸ் முதல் நாள் நடைபெறும் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார். பிரபல பின்னணி பாடகர் ஷ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டாம் நாள் (மார்ச் 7) பிரபல பாடகி ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

    மூன்றாம் நாள்(மார்ச் 8) பிரிபல பாடகி ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி, புகழ் பெற்ற ஷ்ரே கண்ணா குழுவின் நடனமும் நடைபெறுகிறது. வைப்ரன்ஸ் நிறைவு விழாவில் (மார்ச் 9) பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×