என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேங்கைவயல் விவகாரம்: 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வேங்கைவயல் விவகாரம்: 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி

    • மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க கோர்ட்டு திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

    Next Story
    ×